ஆடுகளுக்கு விஷம் வைத்த வாலிபர் கைது
ஆடுகளுக்கு விஷம் வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்கொடி, மலைராஜன் சகோதரர்களின் 30 ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று வந்து தண்ணீர் அருந்தியதும் துடிதுடித்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளுக்கு தண்ணீரில் விஷம் வைத்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவரான அஜித் (28) என்பவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இவர்களுக்கு இடையே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனுஷ்கொடி, மலைராஜன் சகோதரர்களின் ஆடுகளுக்கு அஜித் விஷம் வைத்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story