சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

கடலங்குடி பகுதியில் சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த கடலங்குடி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், கடலங்குடி மேல தோப்புத் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ரமேஷ் (வயது 26) என்பதும், அவர் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.Related Tags :
Next Story