மது விற்ற வாலிபர் கைது


மது விற்ற வாலிபர் கைது
x

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சூரியா (வயது 23) என்பவர் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story