ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும்


ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும்
x

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்

திருக்கோவிலூர் மற்றும் சங்கராபுரம் தாலுகாவிலிருந்து ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட 85 கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரம் தாலுகா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டு தற்போது அங்குள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஆதார் அட்டை தேவைப்படுவதால் ஆதார் அட்டையில் திருத்தம், நீக்கல், தொலைபேசி எண் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு தற்போது கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அல்லது திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீண் செலவும் கால விரயமும் ஆவதால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தற்போது வாணாபுரம் தாலுகா அலுவலகம் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் ஆதார் சேவை மையமும் செயல்பட்டால் பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே உடனடியாக ஆதார் சேவை மையம் தொடங்க தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.


Next Story