கோளத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா
சோளிங்கரில் கோளத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் கோளத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோளத்தம்மன், பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், அலகு குத்திக்கொண்டு வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமி வீதி உலா நடந்தது.
விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், கோபால், ஆஞ்சநேயர், அசோகன், சிவானந்தம், அன்பரசு, வழக்கறிஞர்கள், என்.ஜு.தமிழ்ச்செல்வன், உதயகுமார், சக்கரவர்த்தி, ஊர் முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவில் மாவிளக்கு ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story