பனையடி கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி திருவிழா


பனையடி கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி திருவிழா
x

பனையடி கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருவெறும்பூர் அருகே நவல்பட்டு சாலையில் உள்ள பனையடி கருப்பண்ணசாமி கோவிலில், ஆடி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 25-வது ஆண்டு திருவிழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நேற்று வேங்கூர் காவிரி பூசத்துறையில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு பனையடி கருப்பண்ண சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்ததோடு, கிடாக்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story