விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர்கள், அ.தி.மு.க.வில் இணைந்தனர்2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவு


விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர்கள், அ.தி.மு.க.வில் இணைந்தனர்2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர்கள், அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்கள் 2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர்களாக பாலசுந்தரம்(வடக்கு), அய்யனார்(கிழக்கு) ஆகியோர் இருந்தனர். இதில் பாலசுந்தரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த மண்டல செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர்கள் இருவரும் அக்கட்சியில் இருந்து திடீரென விலகி, நேற்று தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. முன்னிலையில் பாலசுந்தரம், அய்யனார் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று சி.வி.சண்முகம் எம்.பி. சால்வை அணிவித்தார். அப்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ், திண்டிவனம் நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன் , முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், ஒலக்கூர் பன்னீர், மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன், அரசு ஒப்பந்ததாரர் டி. கே.குமார் முன்னாள் கவுன்சிலர் தேவநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

2 பேர் நீக்கம்

இதனிடையே 2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கழகத்தின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தி அவப்பெயரை உண்டாக்கிய காரணத்திற்காகவும் விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர்கள் பாலசுந்தரம்(வடக்கு), அய்யனார்(கிழக்கு) ஆகியோர் அ.ம.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story