கண்டன ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி காந்தி சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வலது கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் சுப்பிர மணியன், இடது கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் உள்ள வருமான வரம்புக்கு வெளியே இருக்கிற மக்களுக்கு நேரடியாக மாதந் தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பி னர்கள் ராஜன், பெருமாள், ராதா, ஜீவா, செல்வராஜ், இடது கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தட்சிணாமூர்த்தி, மயில் வாகனன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.