Normal
சிவகங்கை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
சிவகங்கை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை,
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ெரயிலை சிவகங்கை, மானாமதுரை ெரயில் நிலையங்களில் நிறுத்தவும், பல்லவன் அதிவிரைவு ெரயிலை சிவகங்கை வழியாக மானாமதுரை வரை வழித்தடம் நீட்டிப்பு செய்யவும் தென்னக ெரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி, 3-ந்தேதி சிவகங்கை ெரயில் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று காவிரி,வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர், முன்னாள் சிவகங்கை நகர் மன்றத் தலைவர் அர்ச்சுணன், டெல்லியில் உள்ள ரெயில்வே சேர்மன்,தென்னக ரெயில்வே பொது மேலாளர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story