நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ராமேசுவரத்தில் வடமாநில வாலிபர்களால் படுகொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் வடமாநில வாலிபர்களால் படுகொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்்தது.

நிவாரணம்

ராமேசுவரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வடகாடு பகுதியில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வடமாநில இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத் திற்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் இறால்பண்ணைகளை நிரந்தரமாக மூடவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டனம்

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான சின்னத்துரை கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா மற்றும் தாலுகா உறுப்பினர்கள் அசோக், மணிகண்டன், ராமச்சந்திர பாபு, மாரிமுத்து, கார்த்திக், பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.


Next Story