மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா, ராகுல் மீது பொய் வழக்கு பதிவு செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மீதும், ராகுல்காந்தி மீதும் பொய்வழக்கு பதிவுசெய்து, தலைவர்களை களங்கப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள மத்திய அரசை கண்டித்தும், அமலாக்க துறையை கண்டித்தும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்த டெல்லி காவல்துறையை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலுக்கு இணங்க ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, செந்தாமரைக் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், ரமேஷ் பாபு, ஆனந்தகுமார், ஜெய்னுல் ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல்அஜீஸ், மில்காசெந்தில், பூவலிங்கம், அன்புச்செழியன், ஆதி, ஆர்ட் கணேசன், அணித்தலைவர்கள் ராமலட்சுமி, விக்னேசுவரன், வாணி, செய்யது இப்ராகிம், சுப்பிரமணியன், கோபால், விஜய் ரூபன், செய்யது அபு தாஹீர், நகர் தலைவர்கள் கோபி, கபீர், அஜ்மல், வட்டார தலைவர்கள் கார்குடி சேகர், சேது பாண்டியன், அன்வர், செல்லச்சாமி, மனோகரன், சுப்பிர மணியன், அப்துல் சத்தார், ஆதி, லட்சுமணன், கோவிந்தன், புவனேஸ்வரன், ராமர், முனீஸ்வரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.