விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விவசாய சங்க தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன், விவசாய தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாலுகா பொருளாளர் கஜேந்திரன் தாலுகா குழு தோழர்கள் வீரா, செம்பன், ஆறுமுகம், முருகவேல், ரத்தினகுமார் உட்பட கீழத்தூவல் விவசாய சங்க தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story