ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்


ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவு பூங்கா அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வெ.கவுசல்யா தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.மணி, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை பொது செயலாளர் விடுதலை செல்வன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மா.ஈழவேந்தன் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் இரா. சாவித்திரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மணிப்பூர்மாநிலத்தில் கொடூர மனித உரிமை மீறல்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய மாநில ஒன்றிய அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டுள்ளதை கண்டித்தும், பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.


Next Story