ஆபத் சகாயேஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி


ஆபத் சகாயேஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
x

ஆபத் சகாயேஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவில் நடைசாத்தப்பட்டது. இந்தநிலையில் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோவில் செயல் அலுவலர் வித்யா அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story