பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்


பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்
x

சங்கராபுரம் அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி விமலா கிரேசி (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் நாங்கள் நகைகளை பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறோம்.

எனவே உங்களிடம் நகை இருந்தால் கொடுங்கள் அதனை நாங்கள் புதியது போன்று பாலீஷ் போட்டு தருகிறோம் என விமலா கிரேசியிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது நகையை பாலீஷ் போடுவது போல் நடித்த அவர்கள் விமலா கிரேசியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு நகையை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

ரூ.3 லட்சம்

இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story