ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகைகள் அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகைகள் அபேஸ்
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகைகள் அபேஸ்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த கொடியம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி குமாரி(வயது 40). இவர் சம்பவத்தன்று சென்னை போரூரில் உள்ள தனது அக்கா வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து அரசு பஸ்சில் திண்டிவனத்துக்கு வந்தார். அப்போது குமாரி தனது நகைகள் 7 பவுன் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ் மற்றும் கம்மல், ஜிமிக்கி ஒரு பவுன் என மொத்தம் 11 பவுன் நகைகளை பையில் வைத்திருந்தார். திண்டிவனத்தில் வந்து இறங்கிய பின்னர் அங்கிருந்து கொடியம் பஸ்சில் வீ்ட்டுக்கு வந்தார். அப்போது கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 11 பவுன் நகைகளையும் காணவில்லை. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பஸ்சில் வரும்போது யாரோ மர்ம நபர்கள் நகைகளை அபேஸ் செய்து விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story