வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் 'அபேஸ்'


வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
x

சென்னை அண்ணா நகரில் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி நூதன முறையில் பணத்தை ‘அபேஸ்’ செய்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் போடுவதற்காக பாடியை சேர்ந்த தனுஷ் (வயது 21) வந்தார். அவருக்கு எந்திரத்தில் எப்படி பணம் செலுத்துவது என்பது தெரியாமல் தவித்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்வதாக தனுசிடம் கூறினார்.

எந்திரத்தில் பணம் செலுத்துவதுபோல் நடித்த மர்மநபர், எந்திரத்தில் பணம் செலுத்த முடியாததால் தனது செல்போனில் இருந்து ஆன்லைன் மூலம் உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். அதை நம்பிய தனுஷ், ரூ.36 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேராததால் அந்த நபரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. பின்னர்தான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பணத்தை 'அபேஸ்' செய்தது தனுசுக்கு தெரியவந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story