"நீக்க நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்" - ஓ.பன்னீர்செல்வம்


நீக்க நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் - ஓ.பன்னீர்செல்வம்
x

அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கப்பட்டனர். இதன்படி ரவீந்திரநாத், ஜெயபிரதீப், வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோர் நீக்கப்படுவதாகவும், கட்சியினர் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கட்சி சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. உண்மையான அதிமுக நாங்கள்தான் எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது. ஏதேட்சையான எடப்பாடி பழனிசாமி போக்கு எந்த வகையிலும் செல்லாது. அதிமுகவிலிருந்து ரவீந்தரநாத் எம்பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. இது சட்டப்படி செல்லாது" என்று அவர் தெரிவித்தார்.


Next Story