கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு மனித சங்கிலி; கலெக்டர் தொடங்கி வைத்தார்


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு மனித சங்கிலி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

பாளையங்கோட்டையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு மனித சங்கிலியை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு மனித சங்கிலியை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

மனித சங்கிலி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் அவரது முன்னிலையில் விழிப்புணர்வு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார்.

இதில் தொழிலாளர் துறை இணை ஆணையர் சுமதி, தூய இன்னாசியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் வசந்தி மெடோனா, கல்லூரி செயல் ஜெம்மா மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி-போலீஸ்

இதேபோல் நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நேற்று கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழியை, உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ணலதா தலைமையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் முன்னிலையில் போலீசார் மற்றும் அலுவலக ஊழியர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்கள்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு பொன் ரகு தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசார் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story