வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்


வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்
x

பாலியல் புகார் காரணமாக கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர்

பாலியல் புகார்

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலராக இ.கோபி என்பவர் பணியாற்றிவந்தார். இவர் பணி நேரத்தில் குடிபோதையில் வருவதும், பெண் ஊழியர்களிடம் நெருங்கிப்பழக முயற்சி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாலியல் அச்சத்துடன் பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இநத்நிலையில் சம்பவத்தன்று ஒரு பெண் ஊழியரிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி அத்துமீறி நெருங்கிச்சென்றதாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பணியிடை நீக்கம்

அதன்படி விசாரணை நடத்தி, கலெக்டரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபியை பணியிடைநீக்கம் செய்து, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பாலியல்புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story