தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். வாக்குறுதி அளித்தபடி சங்கராபுரம் தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு பஞ்சமி நிலத்தை மீட்டு கொடுக்க வலியுறுத்தியும், ஊராங்கனி கிராமத்தில் பாதிப்புக்குள்ளான முடிதிருத்தும் தொழிலாளர் இளவரசன் குடும்பத்துக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஜெய்சங்கர், ஏழுமலை, சுப்பிரமணியன், ஸ்டாலின் மணி, பழனி, அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story