குரூப்-2 தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


குரூப்-2 தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
x

மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

திருச்சி

திருச்சி:

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-2-ல் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய வட்டங்களில் 160 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 19 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த பணிகளுக்கென 160 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த போட்டி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 50 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவுக்கு துணை தாசில்தார் நிலையில் ஒரு அலுவலர், ஒரு வருவாய் உதவியாளர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இயங்குவார்கள். தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்ய துணை கலெக்டர் நிலையில் 15 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் கொண்டு செல்ல தடை

ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 192 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story