போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு


போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
x

தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்த பிரின்ஸ் கோபால் ராஜா முன்னிலை வகித்தார்.முன்னதாக ஆசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார்் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, நிர்வாக குழுவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. பின்னர் மாணவர்கள் அனைவரும் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Next Story