போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராணிப்பேட்டை

கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் உமாதேவி, கல்லூரி செயலாளர் கருணாநிதி, கலவை தாசில்தார் சமீம் ஆகியோர் தலைமை தாங்கினர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பாலகண்ணன் உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம், போதை பொருட்கள் நடமாட்டதை தடுப்போம், போதை பொருள் இல்லாத தமிழத்தை உருவாக்குவோம் என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் வருவாய் ஆய்வாளர் வீரராகவன் உள்ளிட்ட ½லர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் லோகேஷ் நன்றி கூறினார்.


Next Story