வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு


வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
x

செங்கல்பட்டு வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செங்கல்பட்டு வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு வக்கீல்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 26-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஏ.கே.சோமசுந்தரம் தலைவராக வெற்றி பெற்றார். செயலாளராக சங்கர் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக மீனாட்சி வெற்றி பெற்றார். பொருளாளராக முனியாண்டி வெற்றி பெற்றார். பெண் வக்கீலுக்காக ஒதுக்கப்படும் துணை தலைவர் பதவிக்கு சுகந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டார். நூலகராக அஸ்வினி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றிபெற்றவர்களுக்கான பதவி ஏற்பு விழா செங்கல்பட்டு வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் பாலகிருஷ்ணன், சொக்கலிங்கம், ஆனந்தீஸ்வரன், கவிதா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு மண்டல செயலாளர் பழனிசாமி, திருப்போரூர் வக்கில்கள் சங்க தலைவர் தேவராஜ் ஆகியோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை பதவியேற்ற தலைவர் சோமசுந்தரம் தலைமை ஏற்று நடத்தினார். முடிவில் செயலாளர் சங்கர் நன்றி தெரிவித்தார்.


Next Story