தொழுநோய், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


தொழுநோய், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

ராணிப்பேட்டையில் தொழுநோய், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ். துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்யபிரசாத், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story