ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு


ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
x

உலக ரேபிஸ் நோய்(வெறிநோய்) தடுப்பு தினத்தையொட்டி நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருவாரூர்

உலக ரேபிஸ் நோய்(வெறிநோய்) தடுப்பு தினத்தையொட்டி நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு முதன்மை டாக்டர் சித்ரா தலைமை தாங்கினார். நாய் மற்றும் பூனை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் எடுத்துக் கூறினார். இதில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திலும் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story