அரசு பஸ் மீது பொக்லைன் வாகனம் மோதி 14 பேர் படுகாயம்


அரசு பஸ் மீது பொக்லைன் வாகனம் மோதி  14 பேர் படுகாயம்
x

அவினாசி அருகே அரசு பஸ் மீது பொக்லைன் வாகனம் மோதிய விபத்தில் பஸ் ஓட்டுனர், நடத்தினர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர்

அவினாசி அருகே அரசு பஸ் மீது பொக்லைன் வாகனம் மோதிய விபத்தில் பஸ் ஓட்டுனர், நடத்தினர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு பஸ் மீது மோதல்

ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை அன்னூரை அடுத்த புகழுரை சேர்ந்த சென்னியப்பன் மகன் மெய்யப்பன் (வயது 40) என்பவர் ஒட்டி வந்தார். பஸ்சில் நடத்துனராக கருப்பசாமி (53) என்பவர் இருந்தார். பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பஸ் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பொக்லைன் வாகனம் ஓட்டுனரின் கவனக்குறைவால் திடீரென்று அரசு பஸ்ஸின் மீது மோதியது. இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தன.

14 பேர் படுகாயம்

விபத்தில் ஓட்டுனர் மெய்யப்பனுக்கு வலது கையில் ரத்தகாயமும், நடத்துனர் கருப்பசாமிக்கு முகம், நெற்றி ஆகிய இடங்களிலும் பலத்த காயமும் ஏற்பட்டது. மற்றும் பஸ் பயணிகள் முரளி, கணேசன், மகேஸ்வரி, ராஜேந்திர பிரசாத், திருஞானசம்பந்தம், முருகானந்தம், சரவணன், சகவத், சுனில் குமார், சாதிக், ஒபிலி நரசிம்மன், வெங்கடேசன் ஆகியோரும காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவினாசி போலீசாருக்கு தகவல் கொடுத்து விபத்தில் சிக்கியவர்களை போலீசார் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து பொக்லைன் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

1 More update

Related Tags :
Next Story