கார்மோதி தாசில்தார் டிரைவர் பலி


கார்மோதி தாசில்தார் டிரைவர் பலி
x

முத்தூர் அருகே கார்மோதி தாசில்தார் கார் டிரைவர் உயிரிழந்தார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

திருப்பூர்

முத்தூர் அருகே கார்மோதி தாசில்தார் கார் டிரைவர் உயிரிழந்தார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிரைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). இவர் காங்கயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கேசவன் தனது மனைவி பரிமளா (46) மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலசு பாத கருப்பணசாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் கேசவன் மாலை 3 மணிக்கு கோவில் முன்புறம் சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது முத்தூரில் இருந்து காங்கயம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கேசவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

பலி

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கேசவனை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கேசவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுஞ்சாலை போலீசார் மூலம் விபத்தை ஏற்படுத்திய காைர ஓட்டிவந்த டிரைவரான திருப்பூர் கோவில்வழி பகுதியை சேர்ந்த கந்தசாமி (48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story