மொபட் மீது ஸ்கூட்டர் மோதி பெண் பலி


மொபட் மீது ஸ்கூட்டர் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா பழைய பாளையம் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 34). ஓசூரில் கோகுல் நகரில் தங்கி ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் ஈஸ்வரி ஸ்கூட்டரில் மத்திகிரி- ஓசூர் சாலையில் பழைய மத்திகிரி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொக்லைன் எந்திரம் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story