சாலை தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலி


சாலை தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலி
x

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது சாலை தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

திருப்பூர்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது சாலை தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேன் வாடகைக்கு

கோவை மாவட்டம் சூலூர் செங்கத்துறை பகுதியைச் சேர்ந்த முருகசாமி என்பவரது மகன் பாலதண்டபாணி (வயது 49). இவர் ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் வீட்டருகே வசிக்கும் கோபிநாத் (36), என்பவர் குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக நேற்று அதிகாலை சூலூரில் இருந்து கோபிநாத் குடும்பத்துடன் பாலதண்டபாணி வேனில் புறப்பட்டார். வேனை பாலதண்டபாணி ஓட்டிச்சென்றார். கோபிநாத், அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் குழந்தைகள் இருவர் ஆகியோர் வேன் உள்ளே அமர்ந்திருந்தனர்.

விபத்தில் பலி

பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அவர்கள் வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் நிலைதடுமாறி ஓடியது. பின்னர் சாலை தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த பாலதண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story