கிருஷ்ணகிரி மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு


கிருஷ்ணகிரி மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 16 Oct 2023 7:00 PM GMT (Updated: 16 Oct 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தாலுகா ஆர்.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). இவர் மோட்டார் சைக்கிளில் சோமார்பேட்டை - தானம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிள், ராமமூர்த்தி ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story