சேந்தமங்கலத்தில் லாரி- டிராக்டர் மோதல் போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலத்தில் லாரி- டிராக்டர் மோதல் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலத்தில் நேற்று காலை ஒரு டிராக்டர் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு பட்டத்தையன் குட்டை கிராமத்தில் நடந்து வரும் தடுப்பணை கட்டும் பணிக்காக சென்று கொண்டிருந்தது. அப்போது பெரிய மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே சென்றபோது, எதிரே செங்கல்சூளைக்கு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதனால் 2 வாகனங்களும் உடனடியாக சரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த சேந்தமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு முன்பாக மாற்று வழியில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story