ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி


ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி
x

ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலியானார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் டி.டி. நகரில் இருந்து டிராக்டரில் முண்டுக்கற்களை ஏற்றிக்கொண்டு தேவர் சிலை அருகே உள்ள இடத்தில் கற்களை இறக்க வந்தார். இறக்க வேண்டிய இடத்தின் காம்பவுண்டு கதவுகள் திறக்கப் படாததால், முத்துக்குமார் டிராக்டரை ஓடிக்கொண்டிருந்த நிலையிலேயே டிராக்டரை விட்டு இறங்கி கதவை திறக்க சென்றார். அப்போது சரிவான தரைப்பகுதியில் டிராக்டர் நின்றதால் தானாகவே ஓடத்தொடங்கியது. இதனைகவனித்து விட்ட முத்துக்குமார் ஓடிவந்து டிராக்டரில் ஏறி நிறுத்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழேவிழுந்த முத்துக் குமார் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story