பரமத்திவேலூரில் கார்- மொபட் மோதல்; தொழிலாளி பலி டிரைவருக்கு வலைவீச்சு
பரமத்திவேலூரில் கார்- மொபட் மோதல்; தொழிலாளி பலி டிரைவருக்கு வலைவீச்சு
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் கார்- மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் பிரபு (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரபு நேற்று மொபட்டில் பரமத்திவேலூர் வந்து விட்டு பின்னர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரூரில் இருந்து நாமக்கல் பைபாஸ் சாலையில் அனிச்சம்பாளையம் பிரிவு அருகே மொபட்டில் சாைலயை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் ஒன்று பிரபுவின் மொபட்டில் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
வலைவீச்சு
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பிரபுவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கர்நாடக மாநிலம் ஏ.சி.எஸ். லேஅவுட் ஆனந்த நிலையம் பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணன் பாபு (48) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
======