பாபநாசம் அருகே விபத்தில் காயம் அடைந்த பெண்ணின் காலில் புகுந்த கொலுசு திருகாணி அகற்றம்
பாபநாசம் அருகே விபத்தில் காயம் அடைந்த பெண்ணின் காலில் புகுந்த கொலுசு திருகாணி அகற்றப்பட்டது.
பாபநாசம் அருகே விபத்தில் காயம் அடைந்த பெண்ணின் காலில் புகுந்த கொலுசு திருகாணி அகற்றப்பட்டது.
பேரூராட்சி பணியாளர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கஞ்சி மேடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது35). இவருடைய மனைவி ராதிகா (30). இவர் பாபநாசம் பேரூராட்சியில் பரப்புரையாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ராதிகா பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் தனது மொபட்டில் துக்க நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ராதிகாவிற்கு கண் புருவம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
கொலுசு திருகாணி
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராதிகாவிற்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கண் புருவத்தில் சிறிய அளவிலான கல் ஒன்றும், கால் பகுதியில் கொலுசு திருகாணி மற்றும் முத்து ஒன்றும் புகுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் உடனடியாக கல் மற்றும் கொலுசு திருகாணி, முத்து ஆகியவற்றை அகற்றிவிட்டு தையல் போட்டனர். இந்த விபத்து குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.