பள்ளிபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; விசைத்தறி தொழிலாளி பலி


பள்ளிபாளையம் அருகே  லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; விசைத்தறி தொழிலாளி பலி
x
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியானார். லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலாளி

பள்ளிபாளையம் அருகே உள்ள லட்சுமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய அங்கமுத்து (வயது 28). விசைத்தறி தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஓடப்பள்ளியில் இருந்து பள்ளிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாகின. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ஜெய அங்கமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story