மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே தெடாவூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 62). தொழிலாளி. இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் அவருடைய வீட்டில் இருந்து விவசாய தோட்டத்துக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் கெங்கவல்லியில் இருந்து லத்துவாடிக்கு மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரியை சேர்ந்த ஜீவா (19), லத்துவாடிவை சேர்ந்த கோபிநாத் (21) ஆகியோர் சென்றனர். அப்போது தெடாவூர் பேரூராட்சி அலுவலகம் அருகில், எதிர்பாராதவிதமாக முத்துலிங்கம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். ஜீவா, கோபிநாத் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story