நாமக்கல் அருகே லாரிகள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு


நாமக்கல் அருகே  லாரிகள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூரில் இருந்து தேங்காய் உரித்த மட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துகாப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த இளவரசன் (வயது 25) ஓட்டி வந்தார். அதேபோல் கன்டெய்னர் லாரி ஒன்று சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரியை வத்தலகுண்டுவை சேர்ந்த முத்துபாண்டி (55) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு நாமக்கல்–- சேலம் சாலை பாப்பிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது டிரைவர் முத்துபாண்டி, கன்டெய்னர் லாரியை வலதுபுறமாக திருப்பி உள்ளார்.

அப்போது பின்னால் தேங்காய் மட்டை லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் லாரி சாலையில் கவிழ்ந்து தேங்காய் மட்டைகள் கொட்டி சிதறியது. மேலும் கன்டெய்னர் லாரி அருகில் உள்ள ஓட்டல் அருகே சென்று நின்றது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் முத்துப்பாண்டி, மட்டை ேலாடு லாரி டிரைவர் இளவரசன் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story