ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஒப்பந்த பணியாளர் பலிவாலிபர் படுகாயம்


ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஒப்பந்த பணியாளர் பலிவாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒப்பந்த பணியாளர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

ஒப்பந்த பணியாளர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வையப்பமலை மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லட்சுமணன் நேற்று மாலை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கண்ணன் (24) என்ற வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.

விசாரணை

அந்த சமயம் 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த கண்ணன் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பலியான லட்சுமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story