ஆத்தூர் அருகே கார் மோதி விவசாயி பலி


ஆத்தூர் அருகே கார் மோதி விவசாயி பலி
x

ஆத்தூர் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமம் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 50), விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அம்மம்பாளையத்தில் இருந்து ஆத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அம்மன் நகர் வழியாக அவர் வந்த போது, அந்த வழியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சுதர்சனம் (34) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் மோதி ராஜா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story