லாரி கவிழ்ந்து விபத்து


லாரி கவிழ்ந்து விபத்து
x

எருமப்பட்டி அருகே லாரி கவிழ்ந்து விபத்து.

நாமக்கல்

எருமப்பட்டி

பெரம்பலூரில் இருந்து நாமக்கல் நோக்கி சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பாஸ்கரன் (வயது41) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை 5 மணி அளவில் எருமப்பட்டி கைகாட்டிக்கு செல்லும் சாலையில் கோழிப்பண்ணை அருகே வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பாஸ்கரன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story