வேலகவுண்டம்பட்டி அருகேமொபட் மீது கார் மோதல்; தொழிலாளி சாவுடிரைவர் கைது


வேலகவுண்டம்பட்டி அருகேமொபட் மீது கார் மோதல்; தொழிலாளி சாவுடிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கோட்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து மொபட்டில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்றார். அப்போது பெரிய மணலி சாலையில் கோட்டம்பட்டி பிரிவு சாலையில் வலதுபுறமாக திரும்பியபோது வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி வந்த கார் மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் (49) என்பவரை கைது செய்தனர்.


Next Story