பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; கூலித் தொழிலாளி பலி


பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; கூலித் தொழிலாளி பலி
x

பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார்.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே அப்பம சமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 36). கூலி தொழிலாளி. இவர், நேற்று கொத்தம்பாடியில் இருந்து வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் கொத்தாம்பாடி பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Related Tags :
Next Story