விபத்தில் நெசவு தொழிலாளி சாவு


விபத்தில் நெசவு தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:15:38+05:30)

விபத்தில் நெசவு தொழிலாளி உயிரிழந்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை, விபத்தில் நெசவு தொழிலாளி சாவு உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ராமலிங்க நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்திரகுமார் (வயது 32). நெசவு தொழிலாளி. சம்பவத்தன்று அவர் ெரயில்வே மேம்பாலத்தில் பாளையம்பட்டியை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சந்திரகுமார் ஓட்டி வந்த சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண் பாண்டியனை (22) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story