நாமக்கல் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவுநண்பர் படுகாயம்


நாமக்கல் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவுநண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

கல்லூரி மாணவர்கள்

சேலம் மாவட்டம் கணவாய்புதூர் அருகே உள்ள வீராச்சியூரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய 2-வது மகன் சூர்யா (வயது 19). இவர் நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை செல்லப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கல்லூரி நண்பர் அரவிந்தின் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அரவிந்தும், சூர்யாவும் கல்லூரி விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டினார்.

சாவு

நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேடு அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அரவிந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story