பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார் மோதி தொழிலாளர்கள் படுகாயம்


பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார் மோதி தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பே.தாதம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் மகன் புகழரசன் (வயது 24). இவருடைய உறவினர் கவியரசன் (22). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவர். புகழரசன், கவியரசன் ஆகியோர் பட்டுகோணாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பே.தாதம்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். சேலம்-அரூர் ரோட்டில் அலமேலுபுரம் பகுதியில் எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story