நாமக்கல்லில் தாறுமாறாக ஓடிய மினி பஸ் மோதி சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் சேதம்
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மினி பஸ் ஒன்று நேற்று தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த மினி பஸ் அங்கிருந்த சரக்கு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவை தலைவரும், மாற்றுத்திறனாளியுமான மணிமாறன் உள்பட சிலர் காயம் அடைந்தனர். இதை கண்ட பிற வாகன ஓட்டிகள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story