மொபட்டை திருடி சென்றவர் தவறி விழுந்து படுகாயம்


மொபட்டை திருடி சென்றவர் தவறி விழுந்து படுகாயம்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டை திருடி சென்றவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள வெள்ளரிஓடையை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவர் தனது மொபட்டை ராமநாதபுரம் அருகே உள்ள குயவன் குடியில் நிறுத்திவிட்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதற்கிடையே அந்த மொபட்டை மதுரையை சேர்ந்த ஹரி (35) என்பவர் திருடிக்கொண்டு ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரி நிலைதடுமாறி மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் திருட்டு மொபட்டில் வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story