சூளகிரி அருகேசரக்கு வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்


சூளகிரி அருகேசரக்கு வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Jun 2023 12:30 AM IST (Updated: 18 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து பேரிகை அருகே உள்ள அத்திமுகத்திற்கு மாங்காய் தோட்டத்தில் வேலை செய்ய கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சூளகிரி அருகே சின்னார் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இடிபாடுகளில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story